Friday, April 23, 2010

மன்னார் மாவட்டம்





















மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டம் இலங்கையின் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கைத்தீவின் வடமேற்குத் திசையில் அமைந்துள்ளது.

இம்மாவட்டத்தின் வடக்கே கிளிநொச்சி மாவட்டமும், வடகிழக்கே முல்லைத்தீவு மாவட்டமும் கிழக்கே வவுனியா மாவட்டமும், தென்கிழக்கே அனுராதபுர மாவட்டமும், தெற்கே புத்தளம் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன. மேற்கே மன்னார் குடாக்கடல் எல்லையாக அமைந்துள்ளது.
இதன் தலைநகரம் மன்னார் நகரமாகும். இது தேர்தல் நோக்கங்களுக்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இலங்கை பாராளுமன்றத்தில் வன்னித் தேர்தல் மாவட்டம் 6ஆசனத்தைக் கொண்டுள்ளது. 5வட்டச்செயலாலர்பிரிவுகளா பிரிக்கப்பட்டுள்ளது.
சிறப்புகள்
கி.பி. 1650 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் படையெடுத்து வரும் வரை மன்னார் பிரதேசம் சகல வளங்களும் பொருந்தியதாக யாழ்ப்பாண இராச்சியத்தின்ஒரு பகுதியாக விளங்கியதாக வரலாறு கூறுகின்றது.
கிமு 5ம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட விஜயன் உட்பட எழுநூறு பேர் இலங்கையில் கரையொதுங்கியதாக மகாவம்சம் கூறுகிறது.
விஜயனுடன் ஒதுங்கிய எழுநூறு பேரில் உபதிஸ்ஸன் என்ற பிராமணனொருவன் இருந்ததாகவும் அவன் மன்னாரில் திருக்கேதீஸ்வரத்திற்கு சென்று வழிபட்டதாக மகாவசம்சத்தில் பதியப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் பழம் பெருமைக்குச் சான்றாக மாதோட்டத் துறைமுகம் கொள்ளப்படுகின்றது.
வரலாற்றுக் காலத்திற்கு முந்திய காலத்திலேயே இந்தியா உட்பட பிறநாட்டு வணிகர்கள் வந்து சென்ற துறைமுகமாக விளங்கிய பெருமை மாதோட்டத்திற்கு உள்ளது.
பொருளாதார நடவடிக்கைகள்
மன்னார் மாவட்டத்தின் முக்கிய பொருளாதார நடவடிக்கையாக அரிசி உற்பத்தியினையும்,மீன்பிடிசார் கைத்தொழிலினையும் குறிப்பிடலாம்
.
தொடரும்.....

No comments:

Post a Comment